மகளிர் உலக ஹாக்கி லீக் தொடரின் அரையிறுதி சுற்றில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி சிலி அணியை ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் ப்ரீத்தி துபே அடித்த கோல் இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தது. இதனையடுத்து இந்திய அணி 4 புள்ளிகளுடன் பி பிரிவில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.