ஆசியக்கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ஆசியக்கோப்பை ஹாக்கி தொடர் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஜப்பான், பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்திய அணி, டாக்காவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்தியா 7-0 என்ற கோல் கணக்கில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது. இந்திய அணியில் ஹர்மன்பிரீத் சிங் இரண்டு கோல்கள் அடித்தார். தொடர்ந்து 2 வெற்றிகளை பெற்ற இந்திய அணி தனது பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியது. விளையாடிய இரண்டிலும் தோல்வி அடைந்ததால், பங்களாதேஷ் அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. இந்திய அணி கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை நாளை எதிர்கொள்கிறது.