ஆசியக்கோப்பை ஹாக்கியில் தென்கொரிய அணிக்கு எதிரான சூப்பர் நான்கு சுற்று ஆட்டத்தில் சமன் செய்து மலேசிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் தென்கொரிய அணியும், மலேசியா அணியும் மோதின. இந்தப்போட்டியில் ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் தென்கொரிய வீரர் யாங் கோல் அடித்து தங்கள் அணிக்கு முன்னிலையை ஏற்படுத்தினார். போட்டி முடிய சில நிமிடங்ளே இருந்த போது மலேசிய வீரர் சாரி கோல் அடித்து சமன் செய்தார். இதனையடுத்து பி பிரிவில் 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்து மலேசிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்த்து மலேசிய அணி விளையாடுகிறது.