ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில், சூப்பர்-4 சுற்றுக்கான கடைசிப் போட்டியில் இந்திய அணி நாளை பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
லீக் சுற்றில் பாகிஸ்தானை வென்ற உற்சாகத்தில் இந்திய அணி களமிறங்குகிறது. சூப்பர்-4 சுற்றில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்திய அணி ஏறக்குறைய இறுதிப்போட்டியை உறுதி செய்துள்ளது. பாகிஸ்தான் அணி, ஒரு புள்ளி மட்டுமே பெற்று கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளது. பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டுமானால், கடைசி ஆட்டத்தில் வெற்றி பெறுவதுடன், மலேசியா-தென்கொரியா இடையிலான போட்டி முடிவும் சாதகமாக அமைய வேண்டும். இந்தியா-பாகிஸ்தான் போட்டி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.