விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை 122 ரன்கள் முன்னிலை

webteam

இலங்கைக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்து வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 294 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இரு நாட்களில் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. புஜாரா மட்டும் நிலைத்து நின்று 52 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் முதல் இன்னிங்கிஸை தொடங்கிய இலங்கை ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் சமாளித்து ஆடியது. அந்த அணியின் மேத்யூஸ் (52), திரிமன்னே (51) ஆகியோர் அரை சதம் எடுத்தனர். இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சாளர் ஹெராத் 67 ரன்கள் குவித்து அவுட் ஆக, இலங்கை அணியின் ஸ்கோர் 294 ரன்னாக உயர்ந்தது. இந்திய அணியை விட 122 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இலங்கை.

இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், ஷமி தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். உமேஷ் யாதவ் 2 விக்கெட்டை எடுத்தார். சுழல் பந்துவீச்சாளர்கள் ஜடேஜா, அஸ்வினுக்கு விக்கெட் கிடைக்கவில்லை.

இதையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தவானும், ராகுலும் ஆடி வருகின்றனர்.