விளையாட்டு

இவர்தான் அடுத்த ஸ்டார்: டிராவிட் நம்பிக்கை

இவர்தான் அடுத்த ஸ்டார்: டிராவிட் நம்பிக்கை

Rasus

இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால ஹீரோ, ரிஷாப் பன்ட்தான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் ஐபிஎல்-லில் டெல்லி அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனாக ஆடியவர் ரிஷாப் பண்ட். ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் தன் தந்தையை இழந்த ரிஷாப், தைரியத்தோடு விளையாடி, தன்னை நிரூபித்துள்ளார்.

இதுபற்றி ராகுல் டிராவிட் கூறும்போது, ‘இந்த வருடம் ரிஷாப் சிறப்பாக விளையாடினார். கஷ்டமான நிலையில் தனது சோகத்தை மறைத்து, ரிஷாப் இப்படி ஆடியிருப்பது அவரது மனோ தைரியத்தைக் காட்டியிருக்கிறது. இந்திய அணியில் அவர் முக்கியமான வீரராக கண்டிப்பாக இருப்பார்.’ என்றார்.