விளையாட்டு

ஷமியை விடாமல் துரத்தும் பிரச்னை - மாதம் ரூ.15 லட்சம் கோரும் மனைவி

ஷமியை விடாமல் துரத்தும் பிரச்னை - மாதம் ரூ.15 லட்சம் கோரும் மனைவி

rajakannan

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழித்ததாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், பாகிஸ்தான் அணியுடன் ஸ்பாட் பிக்ஸிங் புகாரையும் தெரிவித்து இருந்தார். இதனால், இருவருக்கும் இடையிலான கருத்து மோதல் வெடித்து, சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதில், முகமது ஷமி மீதான ஸ்பார்ட் பிக்ஸிங் புகாரில் எந்த முகாந்திரம் இல்லை என கூறி பிரச்னையை பிசிசிஐ முடித்து வைத்தது. மேலும், கிரேட் ‘பி’-யில் விளையாடவும் ஒப்பந்தத்தை உறுதி செய்தது. அதன் பிறகு ஷமி மற்றும் அவரது மனைவிக்கு இடையிலான பிரச்னை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஜீவனாம்சம் கோரி ஹசின் ஜஹான் இன்று மேற்குவங்கத்தில் உள்ள அலிபோர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தன்னையும், தனது மகள் ஆய்ராக்கையும் பராமரிக்க ரூ15 லட்சம் மாதந்தோறும் வேண்டும் என்று கோரியுள்ளார். அதில் ஹசினுக்கு ரூ.10 லட்சம், மகள் ஆய்ராக்கிற்கு ரூ5 லட்சம்.

இதனையடுத்து மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஷமி மற்றும் அவரது குடும்பத்தினரை அடுத்த 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.