விளையாட்டு

சிக்ஸரே இல்லாத இங்கிலாந்து இன்னிங்ஸ்... பாகிஸ்தானுக்கு 212 ரன்கள் இலக்கு நிர்ணயம்

webteam

சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற இங்கிலாந்து அணி 212 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. 

கார்டிஃப் நகரில் நடந்து வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். பாகிஸ்தானின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பீல்டிங்கிலும் கலக்கிய பாகிஸ்தான் அணியினர், இங்கிலாந்து அணியை 49.5 ஓவர்களில் 211 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 46 ரன்களும், பாரிஸ்டோவ் 43 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி, தனது இன்னிங்ஸில் ஒரு சிக்ஸர் கூட விளாசவில்லை. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளும், ஜுனைத் கான் மற்றும் அறிமுக வீரர் ரம்மன் ரயீஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதுவது இதுவே முதல்முறையாகும்.