விளையாட்டு

“காபி வித் கரண் நிகழ்ச்சியில் ஒரு காபி குடித்தேன் ஆனால்...” - ஹர்திக் பாண்ட்யா கலகல

webteam
 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்தும் அதில் ஏற்பட்ட சர்ச்சை குறித்தும் ஹர்திக் பாண்ட்யா இன்ஸ்டா பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். 
 
ஊரடங்குப் போடப்படத்திலிருந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம் லைவ் பேட்டியில் அதிக ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக  இன்ஸ்டா நேரலை அமர்வில் தினேஷ் கார்த்திக்,  ஹர்திக் பாண்ட்யா மற்றும் குருனல் பாண்ட்யா ஆகியோர் இணைந்து உரையாடினர். அப்போது இவர்கள் கொரோனா வைரஸின் தாக்கம் முதல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஒத்தி வைத்தது வரை பல கேள்வி பந்துகளை வீசி விளையாடினர்.
 
 
இந்த அரட்டையின்போது, ஹர்திக் பாண்ட்யாவின்  சர்ச்சைக்குரிய 'காபி வித் கரண்' எபிசோட் பற்றி பேச்சு எழுந்தது. அதற்கு ஹர்திக் பாண்ட்யா மனம் திறந்து பதிலளித்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் பெண்கள் குறித்து தவறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆகவே இவர்  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திலிருந்து (பிசிசிஐ) இடைநீக்கம் செய்யப்பட்டார்.
 
 
 நிகழ்ச்சியில் ஹர்திக் கலந்து கொண்டு வருடம் ஆகிவிட்டது. ஆகவே சர்ச்சைக்குரிய கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம் என்று தினேஷ் கார்த்திக் ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார். அவர் ஒருபோதும் காபி குடிப்பவர் அல்ல என்றும் பாண்ட்யா நிரூபித்தவர். இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட சர்ச்சை குறித்து ஹர்திக், “ஒரு காபிதான் குடித்தேன். ஆனால் அது எனக்கு மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது. இப்போது வரை ஸ்டார்பக்ஸில் விற்கப்பட்ட அனைத்து காபியைக் கணக்கிட்டால்கூட என்னுடைய காபி அதைவிட  விலை அதிகமானது” என்று ஹர்திக் பாண்ட்யா கூறினார்.