விளையாட்டு

ரசிகரின் உதட்டைக் கிழித்த பாண்ட்யாவின் சிக்சர்!

ரசிகரின் உதட்டைக் கிழித்த பாண்ட்யாவின் சிக்சர்!

webteam

ஹர்திக் பாண்ட்யா அடித்த சிக்சர், மைதானத்தில் இருந்த ரசிகரின் உதட்டைக் கிழித்தது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, பெங்களூரில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி தோல்வியடைந்தது. 
இந்திய அணி பேட்டிங் செய்தபோது, ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஜூம்பா வீசிய பந்தை சிக்சருக்கு தூக்குவதில் அதிக ஆர்வம் காட்டினார் பாண்ட்யா. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அப்படி பறந்து வந்து ஒரு சிக்சர் பந்து, விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்த, டோசிட் அகர்வால் (24) என்ற ரசிகரின் உதட்டைப் பதம் பார்த்தது. ரத்தம் கொட்டியதை அடுத்து, மைதானத்தில் இருந்து அவர் அருகில் இருந்த ஹாஸ்மட் என்ற மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பரிசோதித்த டாக்டர் அஜீத் பெனடிக்ட், அவருக்கு தையல்கள் போட்டார். 
தன்னை நோக்கி வந்த பந்து முகத்தில் பட்டுவிடாமல் இருக்க ஒதுங்கியதாகவும் ஆனால், வேகமாக வந்து பந்து உதட்டில் பட்டு கிழித்துவிட்டது என்றும் அகர்வால் தெரிவித்துள்ளார்.