விளையாட்டு

ஹீரோயினை காதலிக்கும் ஹர்திக் பாண்ட்யா! வைரலாகும் போட்டோ!

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, ஹீரோயினுடன் சுற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி, சமீபத்தில் இந்தியா திரும்பியது. இந்தச் சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட ஆறு வீரர்களுக்கு இலங்கையில் இன்று தொடங்கும்  முத்தரப்பு தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஹர்திக் பாண்ட்யா, இந்தி நடிகை பரினீதி சோப்ராவை காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. இதை இருவருமே மறுத்தனர். இந்நிலையில் இவர் இந்தி நடிகை எல்லி அவ்ரமை காதலித்து வருவதாகக் கிசு கிசு பரவியது. எல்லி அவ்ரம், கிஸ் கிஸ்கோ பியார் கரூன், நாம் ஷபானா, போஸ்டர் பாய்ஸ் உட்பட சில இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் ’குயின்’ ரீமேக்கான ’பாரிஸ் பாரிஸ்’ படத்தில் நடித்துவருகிறார். இருவரும் இந்தக் காதல் செய்தியை மறுக்கவில்லை. 

ஹர்த்திக் பாண்ட்யாவும் எல்லியும் ஒரே காரில் மும்பை விமான நிலையத்துக்கு நேற்று வந்தனர். பாண்ட்யா மட்டும் காரில் இருந்து இறங்கிக் கொள்ள, எல்லி அவருக்கு கை காட்டி விடைகொடுத்தார். இதைக் கண்ட சிலர் புகைப்படம் எடுத்தனர். எல்லி உடனடியாகத் தனது தலையை மறைக்க முயன்றார். இருந்தும் சிலரின் கேமராவில் சிக்கிக்கொண்டனர் இருவரும். 
இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.