விளையாட்டு

கால்பந்து கலாச்சாரம் கிரிக்கெட்டிலும் வருகிறதா..?

கால்பந்து கலாச்சாரம் கிரிக்கெட்டிலும் வருகிறதா..?

webteam

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி முடிந்த பின்னர் பஞ்சாப் அணியின் ராகுலும், மும்பை அணியின் ஹர்திக் பாண்டியாவும் தங்களது ஆடைகளை மாற்றி அணிந்து கொண்டனர். 

வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஒவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பொல்லார்ட் 23 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். அடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஒவரில் 5 விக்கெட் இழந்து 182 ரன்கள் மட்டுமே எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 

பஞ்சாப் அணியில் ராகுல் 60 பந்தில் 94 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் போட்டி முடிந்த சிறிது நேரத்தில் மைதானத்தில் பஞ்சாப் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் மும்பை வீரர் ஹர்த்திக் பாண்டியா ஆகியோர்  மைதானத்திலே இருவரும் மைதானத்தில் தங்கள் சீருடையை மாற்றி அணிந்தனர். மேலும் இந்தப் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.  

கால்பந்து போட்டியில் நட்பின் அடிப்படையில் சீருடைகளை வீரர்கள் மாற்றும் வழக்கம் உள்ள நிலையில் தற்போது கிரிக்கெட்டிலும் அறிமுகமாகியுள்ளதாக ரசிகர்கள் வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  நண்பர் என்ற முறையில் சீருடையை மாற்றியதாக கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.