விளையாட்டு

பாண்ட்யா போட்டியை மாற்றிவிட்டார்: ஸ்மித்!

பாண்ட்யா போட்டியை மாற்றிவிட்டார்: ஸ்மித்!

webteam

ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக விளையாடி போட்டியை மாற்றிவிட்டார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியா தொடரைக் கைப்பற்றியது. இந்தூரில் நேற்று நடைபெற்ற போட்டியில், முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி,  6 விக்கெட்டு இழப்பிற்கு 293 ரன்களை குவித்தது. அந்த அணியின் ஆரோன் பிஞ்ச் சதம் அடித்தார். பின்னர் ஆடிய இந்திய அணி, 47.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 78 ரன்கள் குவித்த ஹர்திக் பாண்ட்யா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இதன் மூலம் 5 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில், 3 வெற்றிகளை பெற்று இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.

போட்டிக்குப் பின் பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், ’நாங்கள் சிறப்பாக ஆடினோம். ஆரோன் பிஞ்ச் பிரமாதமாக ஆடி சதமடித்தார். 37-38 ஓவர் வரை சிறப்பாக ஆடிய நாங்கள் பிறகு அதை தக்க வைக்கத் தவறிவிட்டோம். இந்திய பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர்குமாரும் பும்ராவும் சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் 330 ரன்களுக்கு மேல் எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுத்திருந்தால் போட்டியின் தன்மை மாறியிருக்கும். அதே நேரம் ஹர்திக் பாண்ட்யா, சிறப்பாக விளையாடி போட்டியை அற்புதமாக மாற்றிவிட்டார்.’ என்றார்.