இந்தியக் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் தமிழில் தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங்கை ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் சிங்ஸ் அணி எடுத்தது. அதனையடுத்து அவர் தமிழில் தொடர்ந்து ட்வீட் செய்து வந்தார். ஐபிஎல் போட்டியின் போதும் ஹர்பஜன் சிங் தொடர்ந்து பல்வேறு ட்வீட் செய்து வந்தார். இந்நிலையில் தந்தையர் தினத்தையொட்டி ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் “தெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும், அப்பா உன் அன்பிற்கு முன்னே. ஈடு இணை இல்லா அற்புதம் நீ!! வாழ்க்கையின் அர்த்தம் புரியவைத்த தீர்க்கதரிசி நீ!! சுயநலம் என்ற வார்த்தை தெரியாத வள்ளல் நீ!! உலகின் அனைத்து தந்தையர்க்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் நான் உட்பட” எனப் பதிவிட்டுள்ளார்.