விளையாட்டு

“வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்” - வெற்றியின் பூரிப்பில் ஹர்பஜன்சிங்

“வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்” - வெற்றியின் பூரிப்பில் ஹர்பஜன்சிங்

webteam

சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் பூரிப்பில் ட்வீட் செய்வது சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்கு வழக்கம். அதன்படி தற்போது ஒரு ட்வீட் செய்துள்ளார்.

12 வது ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு முதல் அணியாக மும்பை அணி தேர்வாகியுள்ளது. அந்த அணியுடன் மோதும் மற்றொரு அணியை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே அணியும் டெல்லி அணியும் மோதியது. 

அப்போது 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றிப் பெற்றது. இதில் ஹர்பஜன்சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்பஜன் பெற்றுள்ளார்.

இதன்மூலம் இறுதி போட்டியில் மும்பை அணியுடன் மோத உள்ளது. இந்தப் போட்டிக்கு பின்பு ஹர்பஜன் பதிவிட்ட ட்வீட், அதில், “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண win-நயம் செய்து விடல்! சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான். மொத்ததுல நாங்க நாங்கதான்! எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும். மீண்டும் ஒரு @IPL சரித்திர பயணத்தை நோக்கி போடு நடை! Let's do it, #CSK” எனத் தெரிவித்துள்ளார்.