விளையாட்டு

சென்னை கூட ஆடினா அல்லு கியாரண்டி: ஹர்பஜன் கவிதை

சென்னை கூட ஆடினா அல்லு கியாரண்டி: ஹர்பஜன் கவிதை

webteam

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஹர்பஜன் சிங்  தமிழ் ட்விட் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

11வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது. இதில் 2ஆண்டு தடைக்கு பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியுள்ளது. முதல் போட்டியில் மும்பையை எதிர்க்கொண்ட சென்னை பிராவோவின் அதிரடியால் த்ரில் வெற்றி பெற்றது.இதனையடுத்து சென்னை அணி தனது இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்க்கொண்டது.இந்தப்போட்டி சென்னையில் நேற்று நடைப்பெற்றது.இதில் டாஸ் வென்ற சென்னை அணி கொல்கத்தாவை பேட்டிங் செய்ய பணித்தது.

அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி ரஸலின் அதிரடியால் 20ஓவர்களுக்கு 202 ரன்கள் குவித்து. பின்னர் களமிறங்கிய சென்னை அணி ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடியது. வாட்சன் - அம்பத்தி ராயுடு இணை நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியது. வாட்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் மிடில் ஆர்டரில் களமிறங்கிய இளம் வீரர் சாம் பில்லிங்ஸ் அதிரடியாக விளையாடிய 23 பந்துகளில் 56 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.ஒரு பந்து மீதம் இருந்த நிலையில், ஜடேஜா அடித்த சிக்சரால் சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில்  “மெட்ராஸ்ல இருக்குது கிண்டி. நீ ஓட்றதோ பெட்ரோல் போட்ட வண்டி.நீ அடிக்கிற பந்து போயிடுமாடா என்ன தாண்டி.சென்னை கூட ஐபிஎல் ஆடினா உனக்கு அல்லு கியாரண்டி. போயிடுவியா என் ஏரியாவ தாண்டி.செம மேட்ச் மாமா ஷேன் வாட்சன், சாம் பில்லிங்ஸ், அம்பத்தி ராயுடு” எனப் பதிவிட்டுள்ளார்.