இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளராக இருந்தவர் ஹர்பஜன் சிங். சமீப காலமாக அணியில் இடம் கிடைக்கமால் தவித்து வந்த இவரை இந்தாண்டு நடைபெற்ற ஐ.பி.எல். ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அதனை அடுத்து அவர் மிக உற்சாகமானார். அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவர் ஒரு ட்விட் போட்டுள்ளார். அதில், "வணக்கம் தமிழ்நாடு உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம். உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு" என பதிவிட்டு உள்ளார். தமிழ் மொழியிலேயே அவர் ட்விட் செய்திருப்பதைக் கண்டு கிரிக்கெட் ரசிகர்கள் காட்டுத்தனமாக குஷியாகி உள்ளனர்.
உலகம் முழுவதும் மார்ச் 8 உலக மகளிர் தினமாகக் கொண்டப்பட்டது. அப்போது ஹர்பஜனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகளிர் தின வாழ்த்தை கவிதையாக தமிழில் பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அந்தப் பதிவிலும் சென்னை அணியில் அவர் விளையாட இருக்கும் ஆவலை வெளிபடுத்தி இருந்தார்.
அதனைதொடர்ந்து இப்போது, “நான் வந்துட்டேன்னு சொல்லு! தமிழின் அன்பு உடம்பிறப்பெல்லாம் எப்படி இருக்கீக மக்கா? உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில "வீரமா" காதுகிழியிற உங்க விசிலுக்கு நடுவுல விளாடப் போறத நெனச்சாலே "மெர்சலாகுது"”என்றும் தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!!!! என்றும் ட்விட் போட்டு தமிழக மக்களை மெர்சலாக்கி உள்ளார்.