விளையாட்டு

''ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகிற்கும் தல'' - தோனிக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன்!

webteam

தோனி பிறந்தநாளுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்

இன்று தோனியின் 38வது பிறந்த நாள் ஆகும். இதைக் கொண்டாடும் வகையில் சமூக வலைத்தளங்களை தோனியின் ரசிகர்கள் ஆக்கிரமித்துள்ளனர். ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தோனிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதிலும் சென்னை ரசிகர்கள் ‘தல தல’ என்று தலையில் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். 

ஐபிஎல்லில் சென்னை அணிக்காக தோனி விளையாடி வருகிறார். இதனால் தமிழகத்தில் தோனிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. தோனியும் ''சென்னை என்பது என் இரண்டாம் வீடு'' எனக்கூறி அன்பை பகிர்ந்துள்ளார். 

இந்நிலையில் தோனி பிறந்தநாளுக்கு சென்னை அணி வீரரான ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அதில் ’'என் நண்பன்!! என் தலைவன்!! ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகிற்கும் தல. இப்பிடி சொல்லிட்டே போகலாம். சோதனைகளை எல்லாம் சாதனையா மாத்துற ஒரு சக்தி தோனி. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் உயிர் நண்பா. சென்னை சூப்பர் கிங்ஸ் மக்களின் நிரந்தர சொந்தமே, உலக கோப்பை வென்று வா''  என்று குறிப்பிட்டுள்ளார்