தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாண்டி ரோட்ஸ். சிறுத்தையாக பாய்ந்து பீல்டிங் செய்வதில் வல்லவர். இதனால்தான் ஐபில்லில் மும்பை அணியின் பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது மகள், இண்டியா. ரோட்ஸும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரேக் பாஸ்டின்போது சந்தித்தனர். அப்போது ஹர்பஜனின் குழந்தை ஹினயாவும் ரோட்ஸின் குழந்தை இண்டியாவும் சந்தித்துக்கொண்டனர். பிறகென்ன, அவர்கள் ஜாலியாக சிரிப்பால் பேசிக்கொண்டார்கள். இந்த க்யூட் குழந்தைகளை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார் ஹர்பஜன்.
இந்தக் குழந்தைகள் பேசியிருந்தால், என்ன சொல்லியிருக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் செல்லமாக கமென்ட் அடித்துள்ளனர். அதில் ஒன்று:
எங்கப்பா பாயும் புலி பீல்டர்: இண்டியா.
எங்கப்பா சுழல் புலி பவுலர்: ஹினயா.