விளையாட்டு

விராத் கோலி விக்கெட்... பிரதீப் மகிழ்ச்சி

விராத் கோலி விக்கெட்... பிரதீப் மகிழ்ச்சி

webteam

இந்திய கேப்டன் விராத் கோலி விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது என்று இலங்கை பந்துவீச்சாளர் பிரதீப் கூறினார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் நேற்றுமுன் தினம் தொடங்கியது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, 600 ரன்களை குவித்தது. இலங்கை தரப்பில் பிரதீப் 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.  முதல்முறையாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பிரதீப் கூறும்போது, ’முதலில் சரியாக பந்து வீசவில்லை என்றாலும் பிறகு நன்றாக வீசினேன். இந்திய கேப்டன் விராத் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன். அவர் விக்கெட்டை வீழ்த்தியது எனக்கு மகிழ்ச்சி. முதல் முறையாக ஐந்து விக்கெட்டுக்கு மேல் எடுத்தது பற்றி கேட்கிறார்கள். நான்கு விக்கெட்
கிடைத்தபிறகு தொடர்ந்து 15 ஓவர்கள் பந்துவீசினால் சோர்வு ஏற்பட்டுவிடும். அதற்குப் பிறகும் தீவிரமாக பந்துவீச வேண்டும். அதைதான் நான் செய்தேன். பவுன்சராக வீசினேன். அதில்தான் அதிக பயிற்சி எடுத்திருந்தேன். அந்த பவுன்சர்தான் விக்கெட்டை தந்திருக்கிறது’ என்றார்.