விளையாட்டு

“முதலில் பதட்டமாக இருந்தது... ஆனால்...” - நெகிழ்ச்சியுடன் பேசிய ஜெய்தேவ் உனட்கட்

EllusamyKarthik

ஐபிஎல் கோப்பையை ஐந்து முறை வென்ற அணி மும்பை இன்டியன்ஸ். அந்த அணிக்காக விளையாட மெகா ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார் ஜெய்தேவ் உனட்கட். இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவரை ஏலத்தில் எடுக்க சென்னை மற்றும் மும்பை அணிகள் முயன்றன. இறுதியில் மும்பை அணி அவர 1.30 கோடி ரூபாய்க்கு வாங்கியது. 

 

“இந்த சீசனை நான் ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளேன். காலம் காலமாக ஐபிஎல் அரங்கை ஆட்சி செய்யும் அணியில் இப்போது நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி. ஏலத்தின்போது வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் எனது பெயர் கடைசியாக இருந்தது. அதை பார்த்து எனக்கும் கொஞ்சம் பதட்டம் ஏற்பட்டது. இறுதியில் நான் மும்பை அணியால் வாங்கப்பட்டேன். 

சிறு வயது முதலே எனது ரோல் மாடலாக உள்ள ஷேன் பாண்ட் மற்றும் ஜாகீர் கானுடன் இணைந்து பணியாற்றுவதில் சந்தோஷம். மேலும் களத்தில் பும்ராவுடன் பந்து வீச உள்ளது கூடுதல் போனஸ்” எனத் தெரிவித்துள்ளார் உனட்கட். 

30 வயதான அவர் ஐபிஎல் களத்தில் கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, புனே மற்றும் ராஜஸ்தான் அணிக்காக இதற்கு முன்னதாக விளையாடியுள்ளார். மொத்தம் 86 போட்டிகளில் விளையாடி 85 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.