விளையாட்டு

சச்சின் தெண்டுல்கரின் 49வது பிறந்தநாள் - வாழ்த்து தெரிவித்த விராட் கோலி

JustinDurai

சச்சின் தெண்டுல்கரின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது 49-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.  இதனையொட்டி கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலவேறு தரப்பினரும் சமூகவலைத்தளங்கள் வழியாக அவருக்கு வாழ்த்துக்கள்  கூறி வருகின்றனர். அந்தவகையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் சச்சினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கோலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "சிறந்த ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சச்சின் பாஜி நன்றாக இருக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

சச்சினுடைய பிறந்தநாளுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா லட்சுமணன், இஷாந்த் சர்மா, ஓஜா உள்ளிட்ட பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட் லெஜண்ட் என பல பெயர்களுக்கு சொந்தக்காரரான சச்சின் தெண்டுல்கர், 1989 ஆம் ஆண்டு தனது முதல் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். 2013இல் நவம்பர் மாதம் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்றார்.  சுமார் 24 வருட தனது கிரிக்கெட் பயணத்தில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 100 சதங்கள் விளாசியுள்ளார். 7 முறை 200 ரன்கள் எடுத்துள்ளார். மொத்தம் 34,357 ரன்கள் குவித்துள்ளார்.

இதையும் படிக்க: என்னதான் ஆச்சு விராட் கோலிக்கு?' - வருத்தத்தில் ரசிகர்கள்