விளையாட்டு

ஹபீஸ் பந்துவீச்சு மீண்டும் டவுட்!

ஹபீஸ் பந்துவீச்சு மீண்டும் டவுட்!

webteam

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸின் பந்துவீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக மீண்டும் புகார் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ். 37 வயது ஆல்ரவுண்டரான இவர், சுழற்பந்து வீசக்கூடியவர். இலங்கைக்கு எதிராக அபுதாபியில் நடந்த 3-வது ஒரு நாள் போட்டியின் போது, அவர் ஒரு விக்கெட் எடுத்தார். இந் நிலையில் அவரது பந்து வீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக நடுவர்கள், போட்டி நடுவரிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அவர் 2 முறை இத்தகைய சர்ச்சையில் சிக்கியிருந்தார். 2014-ல் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பந்துவீச அனுமதி மறுக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் சர்ச்சையில் சிக்கினார். இப்போது கொடுக்கப்பட்ட புகாரை அடுத்து, ஹபீஸ் அடுத்த 14 நாட்களில் பந்து வீச்சு பரிசோதனைக்குச் செல்ல வேண்டும்.