விளையாட்டு

நியூசி.யில் டிராவிட்டை சந்தித்த பாகிஸ்தான் வீரர்கள்!

நியூசி.யில் டிராவிட்டை சந்தித்த பாகிஸ்தான் வீரர்கள்!

webteam

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை பாகிஸ்தான் வீரர்கள் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பைக் கிரிக்கெட் போட்டி, ஜனவரி மாதம் நியூசிலாந்தில் நடக்கிறது. இதற்கான இந்திய அணியுடன், பயிற்சியாளரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான ராகுல் டிராவிட்டும் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக பாகிஸ்தான் அணி அங்கு சென்றுள்ளது. 

துபாய் வழியாக சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இன்று அதிகாலை ஆக்லாந்துக்கு சென்று சேர்ந்தது. இடையில் ராகுல் டிராவிட்டை பாகிஸ்தான் வீரர்களை சந்தித்துள்ளனர்.

பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ், அவருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ’சுவர் என்று அழைக்கப்படும் ராகுலை சந்தித்தேன். சிறந்த மனிதர். அவரோடு கிரிக்கெட் விளையாடுவதும் பேசுவதும் எப்போதும் பெருமையான விஷயம்’ என்று தெரிவித்துள்ளார்.