விளையாட்டு

ஹர்பஜன் சிங் இடத்தை நிரப்புவது கடினமான ஒன்று - ஐபிஎல் குறித்து பேசிய இர்பான் பதான்

webteam

ஐபிஎல் போட்டியில் ஹர்பஜன் இடத்தை நிரப்புவது சிஎஸ்கேவுக்கு கடினமான ஒன்றுதான் என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பயிற்சியை முடித்த சிஎஸ்கே ஐபிஎல் போட்டிக்காக துபாய் சென்றது. அங்கு 6 நாட்களுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2 வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சென்னைக்கு பின்னடைவாக இது அமைந்தது.

சென்னையின் பயிற்சி தள்ளிப்போகலாம், ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் தாமதம் ஏற்படலாம் என தகவல்கள் கசிந்தன. அதற்கு அடுத்த இடியாக 2020 ஐபிஎல் தொடரிலிருந்து ரெய்னா விலகியதாக தகவல் வெளியானது. பின்பு 2020 ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்பஜன் விலகுவதாக அறிவிக்கப்பட்டது, ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹர்பஜன் சிங், “அன்பு நண்பர்களே. தனிப்பட்ட காரணங்களால் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் நான் விளையாடப் போவதில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் ஹர்பஜன் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், அவரைப்போல சிறந்த ஆஃப் ஸ்பின்னரை கண்டுபிடிப்பது கடினம். எனக்கு தெரிந்து, ஹர்பஜன் இடத்தை நிரப்ப 3-4 பந்துவீச்சாளர்களை சிஎஸ்கே தேர்ந்தெடுத்து இருக்கிறது. ஆனால் ஹர்பஜன் இடத்தை நிரப்புவது கடினம் தான் என தெரிவித்துள்ளார்.

மேலும் ரெய்னா குறித்து பேசிய அவர், என்னுடைய நம்பிக்கையின் படி ரெய்னா திரும்பி வருவார் என்றே நினைக்கிறேன். அதற்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்