விளையாட்டு

ஒவ்வொரு நாளும் நம்பிக்கை அதிகரிக்கிறது: குல்தீப் பூரிப்பு

ஒவ்வொரு நாளும் நம்பிக்கை அதிகரிக்கிறது: குல்தீப் பூரிப்பு

webteam

’ஒவ்வொரு நாளும் எனது நம்பிக்கை அதிகரித்துவருகிறது’ என்று இந்திய கிரிக்கெட் அனியின் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சொன்னார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரு நாள் போட்டித் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இப்போது ஆடுகிறது. முதலாவது போட்டி ராஞ்சியில் நேற்றிரவு நடந்தது. இதிலும் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது குல்தீப் யாதவுக்கு கிடைத்தது. 
பின்னர் பேசிய குல்தீப், ‘டி 20 போட்டியில், முதல் மேன் ஆஃப் தி மேட்ச் விருது பெறுகிறேன். எப்போதும் விக்கெட்டை கணித்தே பந்துவீசுகிறேன். இந்தப் போட்டியிலும் அப்படிதான் வீசினேன். அதற்கு பலன் கிடைத்தது. எனது கணிப்பு பலமுறையாக சரியாக இருந்திருக்கிறது. இதனால் நாளுக்கு நாள், போட்டிக்கு போட்டி எனது நம்பிக்கை அதிகரித்து வருகிறது’ என்றார்.