விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மரபியல் உடற்தகுதி சோதனை

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மரபியல் உடற்தகுதி சோதனை

webteam

இந்திய கிரிக்கெட் வீரர்களின் உடற்தகுதியை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு மரபியல் உடற்தகுதி பரிசோதனை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. 

அணியின் உடற்பயிற்சியாளர் ஷங்கர் பாசுவின் பரிந்துரையின் பேரில் வீரர்களுக்கு சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வீரர்களின் உடற்தகுதி கண்டறியப்பட்டு அ‌தற்கேற்ற வகையில் ஆலோசனைகள் வழங்கப்படும். 

வீரர்களின் ஆற்றலை வளர்த்துக் கொள்ளவும், உடற்தகுதியுடன் இருப்பதற்கும் இந்த சோதனையால் வழிவகை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சோதனை முதன்முதலாக அமெரிக்காவைச் சேர்ந்த என்பிஏ விளையாட்டு வீரர்களுக்கு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.