விளையாட்டு

நான் அணிக்கு திரும்பியதில் ரசிகர்கள் மகிழ்ச்சி: கெய்ல்

நான் அணிக்கு திரும்பியதில் ரசிகர்கள் மகிழ்ச்சி: கெய்ல்

webteam

அயர்லாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி பெல்பாஸ்ட் நகரில் இன்று நடக்கிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்குகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 5 ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. அதற்கு முன்னதாக, அயர்லாந்து அணியுடன் இன்று ஒரு நாள் போட்டியில் மோதுகிறது. இந்தப் போட்டியில், 2015 உலக கோப்பைப் போட்டிக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெறாமல் இருந்த கிறிஸ் கெய்ல், களமிறங்குகிறார்.

 அணியில் இப்போது இடம்பிடித்திருப்பது பற்றி கிறிஸ் கெய்ல் கூறும்போது, ‘நான் அணிக்கு மீண்டும் திரும்பி இருப்பதில் வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 2019-ல் நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் கண்டிப்பாக விளையாட வேண்டும் என நினைக்கிறேன். வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கும் கிரிக்கெட் வாரியத்துக்குமான பிரச்னைகள் தீர்ந்து வருகின்றன.  இதையடுத்து அணியை மேலும் வலுப்படுத்த வேண்டும்’ என்றார்.