விளையாட்டு

ரஸலின் அதிரடிக்கு இந்த பந்துவீச்சாளார் சரியான முட்டுக்கட்டை போடுவார் : காம்பீர் கணிப்பு

ரஸலின் அதிரடிக்கு இந்த பந்துவீச்சாளார் சரியான முட்டுக்கட்டை போடுவார் : காம்பீர் கணிப்பு

webteam

ஐபிஎல் போட்டியில் ஆண்ட்ரிவ் ரஸல் எந்த பவுலரின் பந்துவீச்சில் தடுமாறுவார் என முன்னள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கணித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர் ஆண்ட்ரிவ் ரஸல். கடைசி சில ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்தாலும், பந்தை மைதானத்தின் நான்கு புறங்களிலும் பறக்கவிட்டு ரன்களை வாரிக்குவித்தார் ரஸல். இதனால் சாத்தியமில்லாத வெற்றிகள் கூட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு வசமாகியது.

கடந்த ஐபிஎல் தொடரில் மட்டும் 510 ரன்களை ரஸல் விளாசினார். அவரது ஸ்டிரைக் ரேட் 204.81 ஆக இருந்தது. இதுதவிர அவர் 11 விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தார். இதனால் இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ரஸல் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஸல்க்கு ஐபிஎல் தொடரில் சவலாக 3 பவுலர்கள் இருப்பார்கள் என கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரருமான கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜஸ்ப்ரித் பும்ராவின் பந்து ரஸலை தடுமாறச் செய்யும் என காம்பீர் கணித்துள்ளார். அதுமட்டுமின்றி ரஸலை இந்த முறை ஐபிஎல் போட்டியில் 5 அல்லது 6வது இடத்தில் களமிறக்கக்கூடாது எனவும், அவரை 4வது இடத்தில் களமிறக்குவதே சரியாக இருக்கும் என்றும் காம்பீர் தெரிவித்துள்ளார்.