விளையாட்டு

தோனிக்கும் கோலிக்கும் இடையிலான வித்தியாசம் என்ன ? கவுதம் காம்பீர் விளக்கம்

தோனிக்கும் கோலிக்கும் இடையிலான வித்தியாசம் என்ன ? கவுதம் காம்பீர் விளக்கம்

jagadeesh

ஐபிஎல் டி20 தொடர் கேப்டன்சியில் தோனிக்கும் விராட் கோலிக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

"ஸ்டார் ஸ்போர்ட்ஸ்" தொலைக்காட்சியின் கிரிக்கெட் கணெக்டெட் நிகழ்ச்சியில் பேசிய கவுதம் காம்பீர் "ஐபிஎல் அணித் தலைமை பொறுத்த வரை விராட் கோலி, தோனி இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஐபிஎல் முதல் 7 போட்டிகளுக்கு சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யமாட்டார். முதலாவதாக அணியின் முதல் 7 போட்டிகளுக்கு நிரந்தரமான 6 வீரர்கள் தொடர்ந்து இடம் பெறுவார்கள்" என்றார்.

மேலும் பேசிய காம்பீர் "ஆனால் கோலியோ முதல் 7 போட்டிகளுக்குள்ளாகவே அணியில் ஏகப்பட்ட வீரர்களை மாற்றுவார். எனவே ஆர்சிபி நிலையில்லாத அணியாக முதல் சுற்றிலேயே மாறிவிடும். அதனால்தான் ஆர்சிபி சரியான கலவைகளை கொண்ட வீரர்களை உள்ளடக்கிய அணியாகவே இப்போதுவரை இருக்கிறது. இப்போது கூட நான் சொல்வதெல்லாம் முதல் 7 போட்டிகளில் தொடக்கம் சரியில்லாமல் போனாலும். அணியில் மாற்றத்தை மேற்கொள்ளாமல் கோலி இருக்க வேண்டும்" என்றார்.

இந்திய அணியின் தொடக்க வீரராக இருந்த காம்பீர் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு இருமுறை ஐபிஎல் கோப்பையை வென்று சாதித்தது குறிப்பிடத்தக்கது.