முன்னாள் உலக செஸ் சாம்பியனான ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ், 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சர்வதேச போட்டியில் களமிறங்குகிறார். அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சிங்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடரில் காஸ்பரோவ் விளையாட உள்ளதாக, போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்.
வைல்டு கார்டு எனப்படும் சிறப்பு அனுமதியின் பேரில் பங்கேற்கும் காஸ்பரோவ், தரவரிசையில் முதல் ஒன்பது இடங்களில் உள்ள வீரர்களுடன் விளையாட உள்ளார்.
15 ஆண்டுகள் செஸ் உலகில் ஆதிக்கம் செலுத்திய வந்த, கேரி காஸ்பரோவ், கடந்த 2005-ஆம் ஆண்டு தொழில்முறை செஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகு அவர் பங்கேற்கும் முதல் போட்டி என்பதால், ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.