20 ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சிறந்த வீரர் இல்லை என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ’ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறந்த சாம்பியன் வீரர்தான் தோனி. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், 20 ஓவர் போட்டியிலும் அவர் சிறந்த வீரரா என்பதில் சந்தேகம் இருக்கிறது. அவர் சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர் என்று உறுதியாக கூற முடியாது. 20 ஓவர் போட்டிகளில், 10 வருடங்களில் தோனி ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். 20 ஓவர் போட்டிகளில் தோனியின் சாதனை சிறப்பாக இல்லை’ என்று கூறியுள்ளார்.
நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனே அணிக்காக விளையாடி வரும் தோனி ரன் எடுக்கத் திணறி வரும் நிலையில் கங்குலி இப்படி விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.