விளையாட்டு

பயிற்சியாளரை திட்டியதால் காம்பீருக்கு தடை!

பயிற்சியாளரை திட்டியதால் காம்பீருக்கு தடை!

webteam


பயிற்சியாளரை திட்டிய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு நான்கு முதல் தர போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஹசாரே கோப்பைக்கான தொடரில், கடந்த மார்ச் 6ம் தேதி உத்தரபிரதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருந்தும் கால் இறுதி வாய்ப்பை இழந்தது. இந்த ஆட்டத்தின் போது டெல்லி அணியின் பயிற்சியாளர் பாஸ்கருடன், காம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவரை காம்பீர் திட்டியதாக தகவல்கள் வெளியாயின. 
இதுகுறித்து டெல்லி கிரிக்கெட் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட கமிட்டி விசாரணை நடத்தியது. இதையடுத்து, கம்பீர் அடுத்த சீசனில் நான்கு முதல் தர போட்டியில் விளையாட தடை விதித்து கமிட்டி உத்தரவிட்டது.