விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: 6 விக்கெட் வீழ்த்திய கேப்ரியல், அசராத இலங்கை!

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: 6 விக்கெட் வீழ்த்திய கேப்ரியல், அசராத இலங்கை!

webteam

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 287 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கான இரண் டாவது டெஸ்ட் போட்டி இப்போது நடந்துவருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் தினேஷ் சண்டிமால் 119 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை. வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் கேப்ரியல் 5 விக்கெட்டுகளையும் ரோச் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 300 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் லஹிரு குமரா 4 விக்கெட்டுகளையும் ரஞ்சிதா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, தொடக்க வீரர்கள் விக்கெட்டை விரைவில் பறிகொடுத்தது. ஆனாலும் நடுவரிசை வீரர்கள் நிலைத்து நின்றனர். குசால் மெண்டிஸ் 87 ரன்கள் எடுத்து கேப்ரியல் பந்தில் போல்டானார். கேப்டன் சண்டிமால் 39 ரன்களிலும் சில்வா 48 ரன்களில் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா 62 ரன்கள் எடுத்தும் அவுட் ஆயினர். தனஞ்செயாவும் லக்மலும் களத்தில் உள்ளனர்.

(குசால் மெண்டிஸ்)

இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 334 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் 287 ரன்கள் முன்னிலைப் பெற்றிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்ரியல் 6 விக்கெட்டுகளையும் ரோச் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.