“தொடரை வெல்ல சிறந்த ஆடும் லெவனை இந்தியா களம் இறக்க வேண்டிய நேரம் இது” என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி. வி. எஸ். லக்ஷ்மண் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியை இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இந்நிலையில், இந்திய அணியின் ஆடுலெவன் குறித்து விவிஎஸ் லக்ஷ்மண் சில கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
“விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த தொடரை வெல்ல விரும்பினால் சிறந்த ஆடும் லெவனை இந்தியா களம் இறக்க வேண்டும். அதை செய்ய தவறினால் நிச்சயம் இங்கிலாந்து மீது பிரஷர் போடுவது இயலாத காரியம். ரோகித் ஷர்மா அணியில் இல்லாததும். தவான் மற்றும் கே. எல். ராகுல் அனுபவமும் அணிக்கு தேவை என்பது எனக்கு புரிகிறது. இருந்தாலும் சரியான கலவையில் வீரர்களை கொண்டு வர வேண்டும்.
டெஸ்ட் தொடரும், இதுவும் வெவ்வேறு. அந்த தொடரில் இங்கிலாந்துக்கு துளியளவும் அனுபவம் இல்லை. ஆனால் இதில் அப்படி கிடியாது. டி20 போட்டிகளில் அதிக அனுபவம் கொண்ட அணி. நெம்பர் 1 அணியை வீழ்த்த நாம் அதிகம் முயற்சி செய்ய வேண்டி இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.