இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மாவை முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா புகழ்ந்துள்ளார். சிட்னி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ரோகித்தின் ஆட்டம் ஒரு படி முன்னேறி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அவர் விளையாடுவதை பார்க்கவே சந்தோஷமாக இருக்கும். ஒரு கலைஞனை போல விளையாடுவார். அவரது ஷாட் தேர்வும் சிம்பிளாக இருக்கும். சிட்னி டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் அவரது பொறுமையும், விடாமுயற்சியும் வேற லெவல். அந்த இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் கை ஓங்கி இருந்த போதே அவர்களுக்கு தண்ணி காட்டினார். பந்துகளை அடித்து நொறுக்கும் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நிதானத்தை கடைப்பிடித்தது என்னை ரொம்பவே ஈர்த்துவிட்டது” என ஜடேஜா சொல்லியுள்ளார்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தது ரோகித் மற்றும் கில் விளையாடிய போது தான் அரங்கேறியுள்ளது. இதற்கு முன்னதாக 1968 இல் இந்தியா இந்த சாதனையை ஆஸ்திரேலிய மண்ணில் படைத்திருந்தது.