விளையாட்டு

“மீண்டும் மீண்டும் LBW முறையில் அவுட்டாவது ஏன்?” - சுப்மன் கில்லுக்கு ஆகாஷ் சோப்ரா கேள்வி

“மீண்டும் மீண்டும் LBW முறையில் அவுட்டாவது ஏன்?” - சுப்மன் கில்லுக்கு ஆகாஷ் சோப்ரா கேள்வி

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார். “மீண்டும் மீண்டும் LBW முறையில் அவுட்டாவது ஏன் என்பதை கில் கண்டறிந்தாக வேண்டும்” என்பது தான் அவரது அட்வைஸ். 

இளம் வீரர் கில் இந்திய அணியின் தொடக்க வீரராக விளையாடி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 7 இன்னிங்ஸ் விளையாடி உள்ள கில் மூன்று முறை LBW முறையில் அவரது விக்கெட்டை இழந்துள்ளார். இந்நிலையில் தான் ஆகாஷ் சோபிரார் இதை தெரிவித்துள்ளார்.

“எங்கு மிஸ் செய்கிறோம் என்பதை கில் கண்டறிந்தாக வேண்டும். தொடக்க வீரராக ரன்களை குவிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது. இது கொஞ்சம் கவலை அளிக்கின்ற விஷயமாகவும் உள்ளது” என தெரிவித்துள்ளார் அவர். 

கில் அவரது 13 டெஸ்ட் கிரிக்கெட் இன்னிங்சில் மூன்று அரை சதங்களை விளாசியுள்ளார்.