விளையாட்டு

’6 வருடத்துக்குப் பிறகு ஐபிஎல்-லுக்கு வர்றேன்’: கங்குலி உற்சாகம்!

’6 வருடத்துக்குப் பிறகு ஐபிஎல்-லுக்கு வர்றேன்’: கங்குலி உற்சாகம்!

webteam

’ஆறு வருடத்துக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் மீண்டும் பங்கேற்கிறேன்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.

12-வது ஐபிஎல் டி20 தொடர் வரும் 23 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆறு வருடத்துக்கு முன், புனே அணியில் இடம் பிடித்திருந்தார் கங்குலி. அதற்கு பிறகு இப்போது ஐபிஎல்-லுக்கு மீண்டும் வந்துள்ளார். 

இதுபற்றி கங்குலி கூறும்போது, ‘டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அங்கம் வகிக்க இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் இருக்கிறார். அவருக்கு ஆலோசனைகளையும் உதவியும் வழங்குவேன். டெல்லி அணியுடன் இன்று இணை கிறேன். இதற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்தில் வகித்து வந்த தொழில்நுட்பக் குழு பதவியில் இருந்து சில நாட்களுக்கு முன் விலகி விட்டே ன். ஆறு வருடத்துக்கு பின் ஐபிஎல்-லில் இணைவது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சேர்மன் பார்த் ஜிண்டால் (Parth Jindal) கூறும்போது, ‘’கங்குலி எங்கள் அணியில் இணைந்திருப்பது பெருமையான விஷயம். ‘உலக கிரிக்கெட்டில் அதிக புத்திக்கூர்மை கொண்டவர்களில் கங்குலியும் ஒருவர். இந்திய கிரிக்கெட்டில் இன்று காணப்படும் ஆக்ரோ ஷம், அவர் மூலம்தான் வந்தது. அவரது அனுபவத்தின் மூலம் எங்கள் அணி ஆதாயம் பெறும்’ என்று தெரிவித்தார்.