விளையாட்டு

’’மஹியும் அவரது ஹனியும்’’.. தன் செல்லக்’கிளி’ உடன் ‘தேநீர்’ குடித்து மகிழ்ந்த தோனி!

’’மஹியும் அவரது ஹனியும்’’.. தன் செல்லக்’கிளி’ உடன் ‘தேநீர்’ குடித்து மகிழ்ந்த தோனி!

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தான் வளர்க்கும் கிளி உடன் ‘தேநீர்’ குடித்து மகிழ்ந்துள்ளார். கடந்த செப்டம்பர் முதலே ஐபிஎல் 2021 சீசன் பிற்பாதி தொடர், இந்திய அணி உடன் டி20 உலகக் கோப்பை தொடரில் மென்டராக பயணம் என பிஸியாக இருந்த தோனி, தற்போது வீடு திரும்பியுள்ளார். 

இந்த ஓய்வு நேரத்தை குடும்பத்துடன் இனிதாக செலவிட்டு வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் தனது கிளியை தோளில் சுமந்தபடி ‘தேநீர்’ பருகி உள்ளார் தோனி. அதை போட்டோவாக படம் பிடித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அவரது மனைவி சாக்ஷி தோனி. 

“Mahi” and his “Honey” ! ❤️ #chaidates -என கேப்ஷன் கொடுத்துள்ளார் சாக்ஷி. 

இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. 

2021 ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்னையில் விரைவில் பாராட்டு விழா நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.