விளையாட்டு

சிஎஸ்கே-வை ‘முதியோர் சங்கம்’ என கலாய்த்த ஷேவாக்

சிஎஸ்கே-வை ‘முதியோர் சங்கம்’ என கலாய்த்த ஷேவாக்

EllusamyKarthik

நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமான ஆட்டத்தை விளையாடி வருகிறது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 

புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ள சென்னை ஷார்ஜாவில் மும்பை இந்தியன்ஸ் அணியோடு விளையாடி படுதோல்வி அடைந்துள்ளது. 

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கு முன்னர் சிஎஸ்கே-வை ‘முதியோர் சங்கம்’ என கலாய்த்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான வீரேந்திர ஷேவாக்.

‘Viru ki Baithak’ என்ற சமூக வலைத்தள ஷோ மூலம் இதனை ஷேவாக் தெரிவித்துள்ளார்.

“நடப்பு சீசனின் மிகமுக்கியமான போட்டியாக சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி இருக்கலாம். மும்பையை சென்னை முதல் போட்டியில் வீழ்த்தி இருந்தாலும் அதற்கடுத்த போட்டிகளில் சென்னைக்கான வெற்றி வாய்ப்பு மங்கியது. அந்த அணியை பார்க்க ஏதோ முதியோர் சங்கம் போல தான் தெரிகிறது” என சொல்லியுள்ளார்.