Ganguly
Ganguly PT Desk
விளையாட்டு

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் - மனம் திறந்த சவுரவ் கங்குலி.. ஆதரித்தாரா? எதிர்த்தாரா?

Jagadeesh Rg

உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தங்களுடைய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார், மிரட்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 23-ம் தேதி முதல் இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்துக்கு விளையாட்டுத்துறையை சார்ந்த பல்வேறு வீரர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Bajrang Puniya

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒருவர் கூட இந்த போராட்டம் குறித்து வாய் திறக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. அத்துடன், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், இந்தியாவில் நாம் அனைவரும் கிரிக்கெட்டை வணங்குகிறோம், கொண்டாடுகிறோம். ஆனால் இதுவரை ஒரு கிரிக்கெட் வீரர் கூட எங்களுக்காக பேசவில்லை என தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்.

மேலும், ’எங்களுக்கு ஆதரவாக தான் பேச வேண்டும் என்று கூட நான் சொல்லவில்லை. குறைந்தபட்சம் நாங்கள் போராடுவது குறித்து நடுநிலை கருத்துக்களையாவது நீங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிடலாம். ஆனால் இதனை அவர்கள் செய்யவில்லை. இதை பார்க்கும் போது தான் எனக்கு உண்மையிலேயே வலிக்கிறது’ என்று தன்னுடைய வேதனையை பதிவு செய்திருந்தார் வினேஷ் போகத்.

Vinesh Bhogat

இந்நிலையில், இன்று நிகழ்ச்சியொன்றில் பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, " அவர்கள் தங்களுடைய போரை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என தெரியவில்லை. இந்தப் போராட்டங்கள் குறித்து செய்தித்தாள்களை பார்த்து தெரிந்துக்கொண்டேன். என்னைப் பொறுத்தவரை விளையாட்டு உலகில், ஒரு விஷயத்தை பற்றி உங்களுக்கு முழுமையான அறிவு இல்லை என்றால் அது குறித்து பேசக்கூடாது" என தெரிவித்துள்ளார்.