விளையாட்டு

முன்னாள் கிரிக்கெட் வீரர் கோபால் போஸ் காலமானார்

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கோபால் போஸ் காலமானார். அவருக்கு வயது 71.

பெங்கால் அணிக்காக 78 முதல் தர போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடியவர் கோபால் போஸ். 3757 ரன்கள் எடுத்துள்ள இவரது சராசரி 20.79. இவர் ஸ்பின் பவுலரும் கூட. 72 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இந்திய அணியில் இடம்பெற்றிருந்த இவர், ஒரே ஒரு சர்வதேச போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார். 1974-ல் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 13 ரன்கள் எடுத்தார். அதோடு கிளைவ் லாயிட்ஸ் விக்கெட்டையும் வீழ்த்தினார். பிறகு தேசிய அணிக்காக ஆடவில்லை.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பெங்கல் ஜூனியர் அணியின் பயிற்சியாளராகவும் தேர்வாளராகவும் பணியாற்றினார். 2008-ம் ஆண்டு விராத் கோலி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் உலகக் கோப்பையை வென்ற போது அணியின் மானேஜராக இருந்தவர் இவர்.

(கங்குலியுடன் விழா ஒன்றில் கோபால் போஸ்)

லண்டன் சென்றிருந்த கோபால் போஸுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார். மூன்று நாள் சிகிச்சைக்குப் பிறகு நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.