விளையாட்டு

“அற்புதம், அமர்க்களம், அட்டகாசம்” - சிராஜை புகழ்ந்த கிரேம் ஸ்வான்!

EllusamyKarthik

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை புகழ்ந்துள்ளார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவை LBW முறையில் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று சிராஜ் வீழ்த்தியதுதான் ஸ்வான் அவரை புகழ காரணம். 

“இங்கிலாந்து டாஸ் வென்றதும் பேட்ஸ்மேன்களுக்கு இஷாந்த் ஷர்மா தொந்தரவு கொடுப்பார் என நினைத்தேன். ஆனால் சிராஜ் அதை செய்தது எதிர்பாராத ஒன்று. அதுவும் ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்த சிராஜ் கட்டம் கட்டியதெல்லாம் வேற லெவல். 

அதே போல பேர்ஸ்டோவின் விக்கெட்டை வீழ்த்திய டெலிவெரியும் அற்புதமான ஒன்றாகும். இது சிராஜின் அபாரமான திறனில் ஒரு சின்ன சேம்பிள்தான்” என ஸ்வான் தெரிவித்துள்ளார்.