விளையாட்டு

தி.நகர் ரோட்டு கடையில் மாறுவேடத்தில் ஷாப்பிங் செய்த ஹைடன்..!

தி.நகர் ரோட்டு கடையில் மாறுவேடத்தில் ஷாப்பிங் செய்த ஹைடன்..!

webteam

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான மேத்திவ் ஹைடன் சென்னை தி.நகரின் ஷாப்பிங் செய்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் ஓபனிங் பேட்ஸ்மேனாக இருந்தவர் மேத்திவ் ஹைடன். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் வர்ணனையாளராக பங்கேற்க சென்னை வந்திருந்தார். வந்த அவர் சில தினங்களாக சென்னையில் தங்கி சுற்றிப்பார்த்து வருகிறார். 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே ஹைடனிடம் ஒரு சவால் போட்டுள்ளார். சென்னையில் ஒருநாள் நடந்து சென்று, தி.நகரின் ஷாப்பிங் செய்ய வேண்டும் என்று, ரூ.1000 குறைவான பொருளை தான் வாங்க வேண்டும்  எனவும் வார்னே தெரிவித்துள்ளார். 

இந்தச் சவாலை ஏற்றுக்கொண்ட ஹைடன், ஒட்டு மீசை, தாடி மற்றும் தொப்பியை அணிந்துகொண்டு மாறுவேடத்தில் தி.நகர் சென்றுள்ளார். அங்கு சென்றதும் அதேபகுதி சிறுவன் ஒருவரின் உதவியுடன், தி.நகர் ரோட்டு கடைகளில் ஷாப்பிங் செய்துள்ளார். 

இந்த ஷாப்பிங்கின் போது ஐடன் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியை அணிந்து கொண்டு சென்றுள்ளார். தான் ஷாப்பிங் செய்தபோது போட்ட மாறுவேடத்தை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளமான இன்ஸ்டகிராமில் அவர் பகிர்ந்துள்ளார்.