விளையாட்டு

“உங்களிடம் அர்ப்பணிப்பு அறவே இல்லை” - வருண், திவாட்டியாவை விளாசிய பிராட் ஹாக்!

EllusamyKarthik

வருண் சக்கரவர்த்தி மற்றும் ராகுல் திவாட்டியாவிடம் அர்ப்பணிப்பு என்பது அறவே இல்லை என்று ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் சாடியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் விளையாட தேர்வாகியிருந்த ராகுல் திவாட்டியா மற்றும் வருண் சக்கரவர்த்தி உடற்தகுதி தேர்வில் தோல்வியடைந்ததால் அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரிடத்திலும் அற்பணிப்பு என்பது அறவே இல்லை என சாடியுள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக். 

“இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடுவாதற்கான போதிய பிட்னெஸ் தகுதி அவர்களிடத்தில் இல்லை. அதற்கு காரணம் சர்வதேச கிரிக்கெட் விளையாட அவர்களிடம் அர்ப்பணிப்பு என்பது அறவே இல்லாதது தான். இதுவே அவர்களது கடைசி வாய்ப்பாகவும் இருக்கலாம். அதனால் இந்தியாவில் உள்ள வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், விளையாட்டோ, வேலையோ எதுவாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்பாடுங்கள். உங்களிடம் எதிர்பார்ப்பதை சிறப்பாக செய்து காட்டுங்கள். இந்த வீரர்கள் இருவரும் அவர்களது முதல் வாய்ப்பில் அதை செய்ய தவறிவிட்டனர். அதுவே அவர்களது கடைசி வைப்பாகவும் அமையலாம்” என ஹாக் தெரிவித்துள்ளார். 

வருண் சக்கரவர்த்தி ஐபிஎல் தொடர் மூலம் கவனத்தை ஈர்த்து ஆஸ்திரேலிய தொடரில் முதலில் இடம்பிடித்து, பின்னர் காயத்தினால் விலகி இருந்தார். ராகுல் திவாட்டியாவும் ஐபிஎல் தொடரில் அசத்தியதன் மூலம் அணியில் இடம் பிடித்திருந்தார்.