Unai Simon web
கால்பந்து

519 நிமிடங்கள்.. ’முடிஞ்சா என்ன தாண்டி கோல் அடிங்க..’ ஸ்பெயின் கோல்-கீப்பர் படைத்த வரலாறு!

அதிக நிமிடங்கள் கோல் விட்டுக்கொடுக்காமல் புதிய வரலாறு படைத்துள்ளார் ஸ்பெயின் அணியின் கோல்-கீப்பர் உனாய் சைமன் (Unai Simon).

Rishan Vengai

2026 ஃபிஃபா உலகக்கோப்பையில் ஸ்பெயின் அணி தங்களின் இரும்பு டிஃபென்ஸ் மூலம் கால்பந்து உலகை அதிரவைத்து வருகிறது. நாக்அவுட் உட்பட 4 போட்டிகளில் ஒரே ஒரு கோலும் விடாமல் 4 கிளீன் ஷீட்களை பதிவு செய்துள்ளது. 16 ஆண்டுகளாக நாக்அவுட்டில் தடுமாறிய ஸ்பெயின், ஆஸ்திரியாவை 3-0 என வீழ்த்தி ரவுண்ட் 16-க்கு முன்னேறி, கோப்பை வேட்டையில் வலுவான சவாலாக திகழ்கிறது.

ஸ்பெயின் அணி கோலடிக்குதோ இல்லையோ, அவர்களுக்கு எதிராக கோலடிப்பது மிகவும் கடினமான ஒன்று என பொதுக்கூற்றை நடப்பு உலகக்கோப்பையில் மெய்ப்பித்துவருகிறது ஸ்பெயின் அணி.

உலகக்கோப்பையை யார் வெல்லப்போகிறார்கள் என்ற ரேஸில் ஃபிரான்ஸ், அர்ஜெண்டினா, பிரேசில், போர்ச்சுக்கல் வரிசையில் ஸ்பெயினும் வலுக்கொடுத்து வருகிறது. அவர்களுடைய டிஃபன்ஸ் கோட்டையை இதுவரை எந்த அணியாலும் வீழ்த்த முடியவில்லை. நாக்அவுட் போட்டிகள் உட்பட 4 போட்டிகளிலும் கோல் விட்டுக்கொடுக்காமல் அசத்திவருகிறது ஸ்பெயின்.

அதுமட்டுமில்லாமல் 16 ஆண்டுகளாக நாக் அவுட் சுற்றில் வெளியேறிவந்த ஸ்பெயின் அணி, தங்களுடைய தடையை உடைத்து ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ரவுண்ட் 32 சுற்றில் ஆஸ்திரியாவை 3-0 என வீழ்த்தி அசத்தியது.

உடைக்கவே முடியாத ஸ்பெயினின் டிஃபன்ஸ்..

2026 ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடரில் ஸ்பெயின் அணி தனது அசாத்தியமான தற்காப்பு ஆட்டத்தால் (Defense) ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் மிரள வைத்து வருகிறது.

நடப்புத் தொடரில் இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளிலும் எதிரணிகளுக்கு ஒரு கோல் கூட அடிக்க வாய்ப்பளிக்காமல், 4 தொடர் கிளீன் ஷீட்களை (Clean Sheets) பதிவு செய்து ஸ்பெயின் சாதனை படைத்துள்ளது.

நாக்-அவுட் சுற்றுகளின் மிகக் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியிலும் ஸ்பெயின் அணியின் டிஃபென்ஸ் கோட்டை எரியும் நெருப்பாய் (On Fire) எதிரணிகளின் அட்டாக்கிங் வியூகங்களைச் சாம்பலாக்கி வருகிறது.

குரூப் சுற்று முதல் தற்போது வரையிலான 4 போட்டிகளிலும் ஸ்பெயின் அணியின் தடுப்பாட்டம் உலகத்தரம் வாய்ந்ததாக இருந்துள்ளது. எதிரணியின் முன்கள வீரர்கள் எவ்வளவு முயன்றாலும் ஸ்பெயின் எல்லையைத் தாண்ட முடியாமல் திணறி வருகின்றனர்.

டிஃபெண்டர்களின் பலத்தோடு ஸ்பெயின் அணியின் கோல்கீப்பரும் இக்கட்டான தருணங்களில் பல அபாரமான சேவ்களை (Saves) செய்து இந்த 'கிளீன் ஷீட்' சாதனையைத் தக்கவைக்க முக்கியக் காரணமாக இருந்துவருகிறார்.

"டிஃபென்ஸ் தான் தொடர்களை வென்று தரும்" என்ற கால்பந்து பழமொழிக்கு ஏற்ப, நடப்பு உலகக் கோப்பையை வெல்லும் மிக வலுவான அணியாக ஸ்பெயின் உருவெடுத்துள்ளது.

ஸ்பெயின் கோல்கீப்பர் படைத்த சாதனை..

உலகக் கோப்பை போட்டிகளில் ஸ்பெயின் அணியின் கோல்கீப்பர் உனாய் சைமன் (Unai Simon) கடைசியாக கோல் எதையும் விட்டுக்கொடுக்காமல் 519 நிமிடங்கள் கடந்து சாதனை படைத்துள்ளார். இது ஒரு கோல்கீப்பர் படைத்துள்ள மிக நீண்ட 'கோல் வாங்காத' (unbeaten) சாதனையாகும். இதில் 2022 மற்றும் 2026 உலகக்கோப்பை போட்டிகளும் அடங்கும்.

Unai Simon

இதன் மூலம், 1990ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் இத்தாலியின் வால்டர் ஜெங்கா (Walter Zenga) படைத்திருந்த 517 நிமிடங்கள் என்ற சாதனையை அவர் முறியடித்துள்ளார்.