கால்பந்து உலகக்கோப்பை அரையிறுதியில், 16 கோல்கள் அடித்த பிரான்ஸை, ஒரே ஒரு கோல் மட்டுமே விட்டுக்கொடுத்த ஸ்பெயின் அணி 2-0 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. எம்பாப்பே, லமின் யமால் மோதலில், ஓயர்சபல் பெனால்டி, பெட்ரோ போரோ அற்புத கோல் மூலம் ஸ்பெயின் டிஃபன்ஸ் வலிமையை நிரூபித்து, 2010க்குப் பிறகு 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் இறுதிப்போட்டியை எட்டியது.
கால்பந்து உலகக்கோப்பையில் குறைவான கோல் விட்டுக்கொடுத்த அணிக்கும், அதிகமான கோலடித்த அணிக்கும் இடையேயான போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற கேள்வி எழுப்பினால் உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்.. வெற்றியாளரை கணிப்பது உங்களுக்கு சவாலானதாக இருக்கமல்லவா..? அப்படியான ஒரு போட்டியாக தான் ஸ்பெயின் - பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியை ‘இறுதிப்போட்டிக்கு முந்தைய இறுதிப்போட்டி’ என்று சொன்னால் கூட மிகையாகாது. நடப்பு சீசனில் 16 கோல்கள் அடித்திருக்கும் பிரான்ஸ் அணியும், 1 கோல் மட்டுமே விட்டுக்கொடுத்திருக்கும் ஸ்பெயின் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
எம்பாப்பேவா, லமின் யமாலா யார் இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது என்ற எதிர்ப்பார்ப்பில் நடைபெற்ற போட்டியில், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்பெயின் அணி பிரான்ஸை ஃபிரியாக விளையாட விடாமல் கட்டுப்படுத்தியது. ஸ்பெயின் அணியின் மிட்ஃபீல்டர்கள் அவ்வளவு எளிதாக பிரான்ஸ் வீரர்களிடம் பந்தை செல்ல அனுமதிக்கவில்லை.
மேலும் தொடக்கத்திலேயே 22ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஸ்பெயின் வீரர் ஓயர்சபல் கோலாக மாற்ற, பிரான்ஸ் அணி மீது அழுத்தம் அதிகமானது. எப்படியாவது முதல் கோலை எடுத்துவர வேண்டும் என்ற பிரான்ஸின் முயற்சியை லாவகமாக தடுத்து நிறுத்திய ஸ்பெயின் அணி, தாங்கள் ஏன் டிஃபன்ஸில் தலைசிறந்த அணி என்பதை மீண்டும் நிரூபித்தது. பிரான்ஸுக்கு ஒரு பக்கம் முதல் கோல் வரவே தத்தளித்து கொண்டிருக்க, 58வது நிமிடத்தில் ஒரு அற்புதமான கோலை எடுத்துவந்த பெட்ரோ போரோ ஸ்பெயினின் கோல் எண்ணிக்கையை 2ஆக மாற்றினார்.
அதற்குபிறகு என்ன முயற்சித்தாலும் பிரான்ஸ் அணியால் ஸ்பெயினின் டிஃபன்ஸ் கோட்டையை தாண்டி கோலடிக்க முடியவில்லை. 90+7 நிமிடங்கள் வரை நீடித்த இந்த போட்டியில் டாமினேட் செய்த ஸ்பெயின் அணி 2-0 என வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
2010ஆம் ஆண்டு கோப்பை வென்றபிறகு அடுத்தடுத்த தொடர்களில் லீக் சுற்று, ரவுண்ட் 16-ல் வெளியேறிய ஸ்பெயின் அணி 16 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளது.