Portugal won second UEFA Nations Title 2025 web
கால்பந்து

நேஷன்ஸ் லீக் கால்பந்து| 2-2 என முடிந்த FINAL.. பெனால்டி ஷூட்டில் RONALDO-ன் போர்ச்சுகல் வெற்றி!

ஜெர்மனியில் நடைபெற்ற UEFA நேஷன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பை வென்றது ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணி.

Rishan Vengai

UEFA நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரானது ஜெர்மனியில் நவம்பர் 2024 முதல் தொடங்கி நடைபெற்றுவந்தது. லீக் போட்டிகள் தொடங்கி காலிறுதி, அரையிறுதி என விறுவிறுப்பாக நடைபெற்ற தொடரில் சிறப்பாக செயல்பட்ட போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் அணிகள் இறுதிப்போட்டியை எட்டின.

ஜெர்மனியின் முனிச்சில் உள்ள அலையன்ஸ் அரங்கில் நடைபெற்ற UEFA நேஷன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.

2-2 சமனில் முடிந்த ஃபைனல்.. பெனால்டிஷூட்டில் கோப்பை வென்ற போர்ச்சுக்கல்!

2018-19 முதல் நடத்தப்பட்டு வரும் UEFA நேஷன்ஸ் கால்பந்து லீக்கில் போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் இரண்டு அணிகள் தலா ஒருமுறை கோப்பை வென்ற நிலையில், எந்த அணி இரண்டாவது கோப்பையை வெல்லப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்புடன் போட்டி நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 21வது நிமிடத்தில் ஸ்பெயினை சேர்ந்த ஜுபிமெண்டி முதல் கோலை அடிக்க 1-0 என ஸ்பெயின் லீட் எடுத்தது. ஆனால் நீண்ட நேரம் ஸ்பெயினை மகிழ்ச்சியில் வைக்க விரும்பாத போர்ச்சுக்கல்லின் மெண்டெஸ் 26வது நிமிடத்தில் கோலடிக்க 1-1 என ஆட்டம் சூடுபிடித்தது.

ronaldo

அதற்கு பிறகு இரண்டாவது கோலை அடிக்க விடாமல் இரண்டு அணிகளும் வலுவான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தின. முதல் பாதி முடிவதற்குள்ளாகவே 2வது கோலை அடித்தால் சாதகமாக இருக்கும் என்பதால் இரண்டு அணி வீரர்களும் முழுவேகத்தில் பந்தை விரட்டின. சரியாக 45வது நிமிடத்தில் ஸ்பெயினின் ஓயர்சபால் 2வது கோலை அடிக்க முதல் பாதியை 2-1 என வலுவான நிலையில் முடித்தது ஸ்பெயின் அணி.

Portugal won UEFA Nations Title

விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட இரண்டாம் பாதியில் 61வது நிமிடத்தில் கோலை எடுத்துவந்த போர்ச்சுக்கல்லின் கேப்டன் ரொனால்டோ 2-2 என ஆட்டத்தை சமன்படுத்தினார். அதற்குபிறகு 3வது கோலை அடிக்க இரண்டு அணிகளும் வாய்ப்பை வழங்காத நிலையில் ஆட்டம் சமனில் முடிந்து பெனால்டி ஷூட் முறைக்கு சென்றது. அங்கு 5-3 என லீட் எடுத்த போர்ச்சுக்கல் அணி இரண்டாவது முறையாக கோப்பையை தட்டிச்சென்றது.