கண்ணீர் விட்ட நெய்மர் web
கால்பந்து

ஒரு கோல் கூட இல்லை.. 0-6 என படுதோல்வி.. மைதானத்திலேயே கதறி அழுத நெய்மர்!

வாஸ்கோ அணிக்கு எதிரான ஹோம் போட்டியில் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் நெய்மரின் சாண்டோஸ் அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து நெய்மர் ஜூனியர் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார்.

Rishan Vengai

நவீன கால்பந்து உலகில் ஜாம்பவன் வீரர்களாக வலம்வருபவர்களில் பிரேசிலின் நட்சத்திர ஆட்டக்காரராக திகழும் நெய்மர் ஜூனியரும் ஒருவர். தனது அபார திறமையினால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக வலம்வந்த இவர், பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்திருந்த மறைந்த ஜாம்பவான பீலேவின் சாதனையை முறியடித்துள்ளார்.

3 முறை உலகக் கோப்பையை வென்ற லெஜண்ட் பீலே 92 ஆட்டங்களில் விளையாடி 77 கோல்கள் அடிந்திருந்த நிலையில், நெய்மர் 79 கோல்கள் அடித்து பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் தற்போது முதலிடத்தில் உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் காயம் காரணமாக ஃபார்மை இழந்து தவித்துவரும் நெய்மர், சொந்த மண்ணில் நடைபெற்ற வாஸ்கோ அணிக்கு எதிரான போட்டியில் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் சூழ்ந்திருந்தனர். ஆனால் ஒரு கோல் கூட அடிக்கமுடியாமல் நெய்மரின் சாண்டோஸ் அணி 0-6 என படுதோல்வியடைந்ததை அடுத்து மைதானத்திலேயே அமர்ந்து நெய்மர் கதறி அழுதார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கண்ணீர் விட்டு கதறி அழுத நெய்மர்..

பிரேசிலிய சீரி ஏ கால்பந்து தொடரில் சாண்டோஸ் அணிக்காக விளையாடிவருகிறார் நெய்மர், இது அவருடைய முதல் தொழில்முறை கால்பந்து கிளப் ஆகும். இத்தொடர் முழுக்க மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் சாண்டோஸ் அணி 19 ஆட்டங்களில் 10 தோல்விகளை சந்தித்து பட்டியலில் 15வது இடத்தில் பரிதாபமாக நீடிக்கிறது.

இந்நிலையில் சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் வாஸ்கோ அணியை எதிர்கொண்டு விளையாடியது சண்டோஸ் அணி. இந்தப்போட்டியில் நெய்மர் கம்பேக்கொடுப்பார், தொடர் தோல்வியிலிருந்து சாண்டோஸ் அணி மீண்டும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர்களால் ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை, மாறாக வாஸ்கோ அணி 6 கோல்களை அடித்து படுமோசமான தோல்வியை நெய்மருக்கு பரிசளித்தது.

எதிர்ப்பார்ப்புடன் மைதானத்திற்கு வந்த பல ரசிகர்கள் பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினர். மேலும் வீரர்களை 'shameless' என விமர்சித்ததுடன், வாஸ்கோ அணிக்கும் ஆதரவை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில். தோல்விக்கு பிறகு மைதானத்திலேயே அமர்ந்து நெய்மர் அழ ஆரம்பித்துவிட்டார். அவரை சகவீரர்களும், பயிற்சியாளரும் சமாதனம் செய்தபோதும் டக்அவுட்டுக்கு செல்லும் வழியில் அழுதபடியே வெளியேறினார். இந்த சூழலில் அணியின் தோல்விக்காக சாண்டோஸ் அணியின் பயிற்சியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நெய்மர், சரியாக செயல்படாத சாண்டோஸ் அணியின் வீரர்களை குற்றஞ்சாட்டினார்.