பிபா உலகக்கோப்பை 2026 தொடரில், கோல்டன் பூட் விருதுக்கான அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 7 கோல்களுடன் லியோனல் மெஸ்சி, கிலியன் எம்பாப்பே மற்றும் எர்லிங் ஹாலண்ட் ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர்.
கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தும் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர், ஜூன் 11ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், கால்பந்து உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடிப்பவர்களுக்கு வழங்கப்படும் தங்கக் காலணி (கோல்டன் பூட்) விருதுக்கான போட்டியில், பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே தன்னை நிலைநிறுத்திக்கொண்டே இருக்கிறார். தங்கக் காலணிக்கான போட்டியில் அர்ஜெண்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி உடன் 7 கோல்கள் அடித்து எம்பாப்பேவும் சமன் செய்துள்ளார்.
பராகுவே அணியுடனான போட்டியில் பெனால்டி வாய்ப்பில் 70ஆவது நிமிஷத்தில் கிலியன் எம்பாப்பே கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் மெஸ்ஸியுடன் சமன் செய்துள்ளார். உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் மெஸ்ஸி 20 கோல்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். எம்பாப்பே 19 கோல்களுடன் இரண்டாமிடத்தில் தொடர்கிறார். இதுவரை, உலகக் கோப்பையில் 19 முறை பங்கேற்றுள்ள எம்பாப்பே 19 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.